AK 62: அஜித்திற்காக ரிஸ்க் எடுக்கும் விக்னேஷ் சிவன்…ஒர்கவுட் ஆகுமா ?

அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் வெளியான மூன்றாவது படம் தான் துணிவு. நேர்கொண்டப்பார்வை ,வலிமை படங்களை தொடர்ந்து வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றது.

கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த அஜித் மற்றும் படக்குழுவிற்கு எதிர்பார்த்த வெற்றியை துணிவு தேடி தந்துள்ளது.

Rajini: நமக்கு இந்த போட்டியெல்லாம் வேண்டாம்..ஒதுங்கிய தலைவர்..ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்தாலும் சமூகம் சார்ந்த கருத்தை இப்படம் கூறியுள்ளதால் பொதுவான ரசிகர்களும் இப்படத்திற்கு ஆதரவு தருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை அடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதையடுத்து இப்படம் விக்னேஷ் சிவனின் பாணியில் காதல் கலந்த காமெடி படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது வந்த தகவலின் படி இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக தெரிகின்றது. இதன் மூலம் விக்னேஷ் சிவன் முதல்முறையாக ஆக்ஷன் படத்தை எடுக்கவுள்ளார். எனவே விக்னேஷ் சிவனின் இந்த புது முயற்சி அவருக்கு வெற்றியை தேடி தருமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.