Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம்..! விக்ரமன் 2ம் இடம்

Bigg Boss Tamil Season 6 Winner: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சென்றனர். தங்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்று பிக்பாஸ் தமிழின் இறுதிப் போட்டி வரை சென்ற அவர்களில் இப்போது அசீம் வெற்றி பெற்றுள்ளார். இதனையொட்டி மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. 

அசீம் கோபம் மற்றும் தடித்த வார்த்தைகள் மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை உருவாக்கினாலும், அவர் தனித்துவமாக விளையாடியதாக கூறி அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாக்களித்தனர். ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் தங்களின் அமைதி மற்றும் தெளிவான அணுகுமுறைகளால் மக்களை கவர்ந்தனர். இருந்தாலும் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. விக்ரமனுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனே டிவிட்டர் பக்கத்தில் நேரடியாக ஆதரவு கேட்டார். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி என்றாலும் எளிய மக்களின் குரலையும், வாழ்வியலையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசிக் கொண்டே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட சமூகம் மீது அக்கறை கொண்ட பலரும் விக்ரமனுக்காக பொதுவெளியில் ஆதரவு கேட்டனர். இருந்தபோதும், அதிக வாக்குகளை பெற்ற அசீம், பிக்பாஸ் சீசன் 6 தமிழின் டைட்டிலை வென்று அசத்தியுள்ளார்.

அவர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரை விட அதிக வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் இறுதிப்போட்டி நிகழ்ச்சி மேடையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த விக்ரமன் மற்றும் ஆசீம் ஆகியோரின் கைகளை பிடித்திருந்த கமல்ஹாசன், இறுதியாக அசீம் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் தமிழின் வெற்றியாளருக்கான பரிசுத் தொகையை அசீம் பெற்றுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.