‘படத்தை ஓடவிடுங்க சார்..!’- அஸ்ஸாம் முதல்வருக்கு போன் போட்ட ஷாருக்கான்.!

அஸ்ஸாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்தி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் நாடுமுழுவதும் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி உடையுடன் பிகினி அணிந்திருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்யவேண்டும் என கண்டனங்கள் எழுந்தன.

மேலும் அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில், இந்த படம் திரையிட உள்ள திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பதான் படத்தின் போஸ்டரை இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில நகரங்களில் பதான் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகள் சூறையாடப்பட்டன. போஸ்டர் கிழிக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்தில் பஜ்ரங் தள் அமைப்புகள் நடத்தி வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த பிரச்சினை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் என்னை தொடர்பு கொண்ட போதிலும், சம்பந்தபட்ட ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. யார் அந்த ஷாருக்கான்?.. எனக்கு அவரை தெரியாது.

ஆனால், அவர் அழைத்தால் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்னை என்பதை பார்ப்பேன். சட்ட ஒழுங்கு மீறப்பட்டிருந்தால், சட்டத்தினை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஷாருக்கான் யார் என அஸ்ஸாம் முதல்வர் கேட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று அதிகாலை 2 மணிக்கு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கௌகாத்தியில் நடந்த சம்பவம் குறித்த தனது கவலையை அவர் தெரிவித்தார்.

எவ்வித பிரச்சினையும் இன்றி படம் வெளியாக வேண்டும் என அவர் வேண்டினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதை சுட்டிக்காட்டி நான் அவருக்கு உறுதி அளித்துள்ளேன். விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை விவகாரம்; மகளிர் ஆணைய தலைவரை சஸ்பெண்ட செய்க.!

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய உரையில், “நம்மில் சிலர் திரைப்படங்களைப் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.