Chennai Gold Rate: நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் சரி தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறைந்ததே இல்லை. அந்த வகையில் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5682 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 45456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.42,600-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ 40 குறைந்துள்ளது. ஒரு கிராம் 5,325 க்கு விற்பனையான தங்கம் இன்று ரூ 5 குறைந்து 5,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது, இதனால் ஒரு கிராம் 74 ரூபாய் 30 பைசாவாக வெள்ளி விலை உள்ளது. கிலோ 200 ரூபாய் குறைந்து கிலோ வெள்ளி விலை 74,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய தினத்தை பற்றி பேசுகையில், தங்கம் விலை கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 5,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 40 ரூபாய் சரிவடைந்து, 42 ஆயிரத்து, 560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 காசு குறைந்து, 74.30 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்
இதற்கிடையில் வரவிருக்கும் வாரத்தில் மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தினை தங்கம் விலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமாடிட்டி நிபுணர்கள் , அமெரிக்க டாலரின் மதிப்பானது 7 மாத சரிவில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகின்றது. எனவே வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | புகைப்பட கலைஞர்களுக்கும், திரைத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் தமிழக அரசின் சூப்பர் ஆஃபர்! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.