அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்!


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாஸ் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 72, பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட போது தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு விழாவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். 

இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை இந்த ஆண்டின் 33வது வெகுஜன துப்பாக்கிச் சூடு என்று அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்! | Suspect In Los Angeles Mass Shooting Shot HimselfGetty Images

இதற்கிடையில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கும் நபரின் தோற்ற விவரங்களையும், புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை வேனை SWAT பொலிஸார் குழு நேற்று முற்றுகையிட்டு சோதனை நடத்தியது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சந்தேகத்திற்குரிய வேனை பொலிஸார் குழு சுற்றி வளைத்த போது, துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டது.
இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா வெளியிட்ட தகவலில், “சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டு காயம் அடைந்தார், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹூ கேன் டிரான் வேனுக்குள் இறந்து கிடந்ததை தொடர்ந்து சந்தேக நபரை தேடும் பணி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்! | Suspect In Los Angeles Mass Shooting Shot HimselfSky News

மேலும் பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வேறு சந்தேக நபர்கள் யாரும் இல்லை என்றும், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷெரிப் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.