உடைந்த 30 எலும்புகளும் வலுவடையும்! மீண்டு வருவேன்..விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு


படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர், விரைவில் குணமடைவேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

பனிப்புயல் விபத்து

அவெஞ்சர்ஸ் படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தவர் ஜெர்மி ரென்னர்.

இவரது கார் சில நாட்களுக்கு முன்பு பனிப்புயலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் ஜெர்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஜெர்மி ரென்னர்/Jeremy Renner

@John Salangsang/Shutterstock

சிகிச்சை புகைப்படம்

இந்த நிலையில் ஜெர்மி ரென்னர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில், ‘நான் நலம் பெற குறுந்தகவல்கள், சிந்தித்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அன்பும், பிணைப்பும் ஆழமடைவதைப் போலவே, இந்த 30க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள் சரியாகி, வலுவடையும்’ என தெரிவித்துள்ளார்.    

ஜெர்மி ரென்னர்/Jeremy Renner

@Jeremy Renner Instagram



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.