சீமான் உறுதி.. பிரச்சாரத்தில் அமமுக தொண்டர்கள்… களைகட்டும் இடைத்தேர்தல்

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல்

பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பாளரை அறிவிப்பது குறித்து திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில் பேச்சு வார்த்தை முடிந்து ஓய்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த்லில் பெண் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே நேற்று இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுடன் சீமானை கலந்துரையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் தேமுதிக அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிரஷர்குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தொண்டர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.