12 கி.மீ. சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்! நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்


மகாராஷ்டிரத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் 12 கி.மீ சென்று ஒரு மாணவனுக்கு பாடம் நடத்தி விட்டு வரும் ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.              

மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமத்தில் மொத்தம் 150 பேர் வசித்து வசித்து வருகின்றனர். 

 அங்கு அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. அதில் 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை மட்டும் கொண்டுள்ளது. 

அந்த பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்.  

 அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருவாக கூறப்படுகின்றது.  

காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்குகின்றது. 

12 கி.மீ. சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்! நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல் | Teachers Traveling 12 Km To School For One Student

ஆசிரியர் கூறுவதாவது

 2 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருவதனால் பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 

இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் கற்று கொடுக்கிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது.

  ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தபோதும், மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இந்த பள்ளியை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

 இந்த ஆசிரியரின் நற்செயலை அந்த கிராம மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 

12 கி.மீ. சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்! நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல் | Teachers Traveling 12 Km To School For One Student



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.