பெயரில்லாத அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வீரர்களின் பெயர்!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பராக்ரம தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியை திறந்து வைத்தார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்றுச் சிறப்பை நினைவில் கொள்ளும் வகையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெருமைகளை உணர்வதற்கும் ரோஸ் தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று பிரதமர் 2018ஆம் ஆண்டில் அங்கு பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடி பெயர் மாற்றம் செய்தார். நெய்ல் தீவு மற்றும் ஹாவ்லாக் தீவு போன்றவற்றுக்கு ஷாஹித் தீவு மற்றும் சுராஜ் தீவும் என்றும் மறு பெயர் சூட்டப்பட்டது.

நம் நாட்டின் நிகழ்கால பராக்ரமசாலிகளுக்கு உரிய மரியாதை வழங்குவதற்கு நமது பிரதமர் முனைப்போடு செயல்பட்டு வருவதாகவும், இந்த உணர்வை மனதில் ஏந்தியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைப்பதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த்த் தீவுகளில் மிகப் பெரிய தீவிற்கு முதல் முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் பெயரும், இரண்டாவது பெரிய தீவிற்கு 2ஆவது முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் காப்பதற்கு தன்னுயிர் வழங்கிய நமது வீரர்களுக்கு என்றென்றும் மரியாதை செலுத்தும் வகையில் இது அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, பெயரிடப்படாத இந்தத் தீவுகளுக்கு 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களான மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் மற்றும் ராணுவ தளபதி கரம்சிங் எம் எம், 2ஆவது லெஃப்டினென்ட் ஜெனரல் ராமரகோப ரானே, நாயக் ஜதுநாத் சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங், கேப்டன் ஜி எஸ் சலாரியா, லெஃப்டினெனட் கர்னல் தன்சிங் தாப்பா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைட்டான் சிங் சிக்யூஎம்எச், அப்துல் அமீது, லெஃப்டினென்ட் கர்னல், அர்தேஷிர் புர்ஜோர்ஷி தாராப்பூர், லான்ஸ் நாயக் அல்பெர்ட் யெக்கா, மேஜர் ஹோஷியர் சிங், 2-வது லெஃப்டினென்ட் ஜெனரல் அருண் கேட்ரப்பால், விமானப்படை அதிகாரி நிர்மல்ஜித் சிங் ஷக்கான், மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், நைப் சுபேதார் பாணா சிங் கேப்டன் விக்ரம் பத்ரா, லெஃப்டினென்ட் ஜெனரல் மனோஜ்குமார் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், சுபேதார் மேஜர் (ஓய்வு) கிரணடியெர் யோகந்தர்சிங் யாதவ் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பராக்கிரம தினத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த உத்வேகம் அளிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது என்றார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இன்று ஒரு வரலாற்று நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், “வரலாறு உருவாகும்போது, வருங்கால சந்ததியினர் அதை நினைவில் வைத்துக் கொள்வதும், மதிப்பிடுவதும் மட்டுமல்லாமல், அதிலிருந்து தொடர்ந்து உத்வேகமும் பெறுகிறார்கள்” என்றார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 21 தீவுகளுக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுவதாகவும், அவை இப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களில் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வாழ்க்கையைப் போற்றும் வகையில், அவர் தங்கியிருந்த தீவில் புதிய நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வருவதாகவும், இந்த நாளை வருங்கால சந்ததியினர் விடுதலையின் அமிர்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நேதாஜி நினைவுச்சின்னம் மற்றும் புதிதாக பெயரிடப்பட்டுள்ள 21 தீவுகள் இளம் தலைமுறையினருக்கு நிலையான உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.