ஏப்ரலில் பாஜகவின் அதிரடி ஆட்டம்… தெற்கை வளைக்க பிரம்மாண்ட வியூகம்!

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டே இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவிற்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் தென்னிந்திய மாநிலங்களும் அடங்கும்.

தமிழ்நாடு பிளான்குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இதேபோல் வரும் மக்களவை தேர்தலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்.பிக்களை பெற ஸ்கெட்ச் போட்டுள்ளது. இதற்காக நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை லிஸ்ட் போட்டு வைத்துள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சு வரும் போது சரியான நேரத்தில் தொகுதிகளை கேட்டு பெற காய்களை நகர்த்தி வருகிறது.

பாத யாத்திரைஇந்நிலையில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாத யாத்திரை நடத்த டெல்லி பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதையொட்டியே தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் பாத யாத்திரை நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சமீபத்தில் கடலூரில் நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு தொடர்பாக அறிவிப்பு வெளியானது.
​அடிச்சு ஆடும் அமித் ஷா… வசமாகுமா பூமிகார் வாக்குகள்? ஆட்டம் காணும் பிகார் அரசியல்!​
ஏப்ரலில் தொடக்கம்அதாவது, ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாத யாத்திரை தொடங்குகிறது. எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்த போது வேல் யாத்திரை நடத்தி கவனம் ஈர்த்தார். அதாவது முருகனை உயர்த்தி பிடித்தால் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்று பாஜக நினைத்தது. இந்த யாத்திரை தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
மீண்டும் முருகன்அதேபோல் மீண்டும் முருகனிடம் இருந்தே தொடங்கும் வகையில் திருச்செந்தூரை தேர்வு செய்துள்ளனர். இங்கிருந்து மாநிலம் தழுவிய அளவில் பாத யாத்திரை நடைபெறவுள்ளது. அப்போது ஆளுங்கட்சி மீது விமர்சனங்கள் முன்வைத்து மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களை கவருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா அரசியல்இதேபோன்று தெலங்கானா மாநிலத்திலும் பாத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. இவர் தேசிய அரசியலில் தடம் பதிக்கும் வகையில் தனது கட்சியின் பெயரை மாற்றி அமைத்தார். வரும் 2024 மக்களவை தேர்தலில் பல்வேறு மாநில கட்சிகளுடன் கைகோர்த்து போட்டியிட்டு பிரதமர் ஆகும் கனவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிரா வியூகம்இத்தகைய சூழலில் சொந்த மாநிலத்திலேயே சந்திரசேகர் ராவிற்கு ஷாக் கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மொத்தமுள்ள 17 தொகுதிகளை 4 இடங்களை பாஜக தன்வசம் வைத்திருக்கிறது. இதனை இரண்டு இலக்க எண்ணிக்கையில் அதிகரிப்பதற்கு டெல்லி தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்திலும் பாத யாத்திரை நடத்த பிளான் உருவாக்கப்பட்டு வருகிறது.
​Old Mysore Region: வெற்றியை தீர்மானிக்கும் கர்நாடக தமிழர்களின் வாக்கு வங்கி!​
2024 மக்களவை தேர்தல்மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 23 இடங்களை கைப்பற்றி பாஜக வலுவான நிலையில் உள்ளது. மாநில அளவிலும் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைக்குமாறு செய்தது. தற்போது சிவசேனாவின் ஒரு பிரிவினர் பாஜக உடன் கைகோர்த்து நிற்கின்றனர். இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று வரும் மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற மும்முரம் காட்டி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.