Shruti Haasan Birthday: குட்டி ஸ்ருதி ஹாசனை அறிமுகப்படுத்தும் கமல்! வைரல் வீடியோ!

இந்திய சினிமாவின் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன், பின்னணி பாடகி, இசையமைப்பாளர், நடிகை என்று பல திறமைகளை கொண்டுள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னரே திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமான ஸ்ருதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  அவருடைய பிறந்த நாளான இன்று பலரும் அவர்ருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து  வருகின்றனர்.

ஸ்ருதியின் நடிப்புப் பயணம் அவரது தந்தையின் ஹே ராம் (2002) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினாலும், புகழை பெற வேண்டும் என்ற ஆர்வம் சிங்கப்பூரில் கமல் ஒரு மேடையில் ஒரு பெரிய கூட்டத்திற்கு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து தொடங்கியது. சிறுமி ஸ்ருதியின் வீடியோ கடந்த ஆண்டு வைரலாகத் தொடங்கியது, அதைக் கண்டு பிடித்து கொடுத்ததற்காக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்ருதி அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

வீடியோவில், கமல்ஹாசன் மேஜிக் மூலம் முதன்முறையாக மேடையில், பொது வெளியில் அதிகம் வராத, அதிக பரிச்சயமில்லாத ஸ்ருதி ஹாசனை அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது நகைச்சுவையால் பார்வையாளர்களை திகைக்க வைக்கிறார். விவாகரத்து பெற்ற தனது பெற்றோர்களான கமல் மற்றும் சரிகா இருவருடனும் மேடையை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிக்கு இந்த வீடியோ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது எனலாம்.

அந்த வீடியோவில், ஸ்ருதி கூறுகையில், “நான் இதற்கு முன்பு தேவர் மகன் படத்தில் பாடியிருந்தாலும், மேடையில் நான் தோன்றுவது இதுதான் முதல் முறை. என் கால்கள் நன்றாக நடுங்குகின்றன, ஆனால் நான் பட்டு பாவடை அணிந்திருப்பதால் அவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை. இதுக்கு மேல் பேசினால் துள்ளிக்குதிக்க ஆரம்பிப்பேன். அதனால் ஒரு பாட்டு பாடி விட்டு பிறகு தான் கிளம்புவேன். நன்றாக இருந்தால் எனக்காக கைதட்டவும். அது இல்லை என்றால்… எப்படியும் எனக்காக கைதட்டவும். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு குட்டி பெண், இல்லையா?”… என கூறுவது மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து ஸ்ருதி ஹாசன் தற்போது ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, சில நாட்களுக்கு முன் அவரது சமூக சேவையை பாராட்டி, ஸ்ருதி ஹாசனுக்கு PC எனப்படும் பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார். நாட்டிற்கு சேவை செய்யும் அர்ப்பணிப்பு குணத்தை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பவர் காரிடர்ஸ் இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு அந்த விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.