கனடாவில் சாலை ஓரத்தில் கிடந்த சடலம்! காலை நேரத்தில் சம்பவம்


கனடாவில் சாலையில் ஆண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சாலை ஓரத்தில் சடலம்

Nanaimo நகரில் உள்ள சாலை ஓரத்தில் 34 வயதான நபர் இரு தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தார்.
காலை 7 மணிக்கு நடைபயிற்சி செய்த ஒருவர் தான் சடலத்தை முதலில் பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றினார்கள்.
அந்த நபரின் காயங்கள் மோட்டார் வாகனத்தில் மோதியதில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சாலை ஓரத்தில் கிடந்த சடலம்! காலை நேரத்தில் சம்பவம் | Man Found Dead On Side Of Road In Nanaimo Canada

POSTMEDIA FILE

வீடியோ

அவருக்கு நிலையான முகவரி இல்லை எனவும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிசிடிவி வீடியோ அல்லது வேறு வீடியோ ஆதாரம் இருந்தால் தங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.