தமிழக வீரரின் மிரட்டல்! பந்துவீச்சு 20 ஓவர்களில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.


துல்லியமான பந்துவீச்சு

லக்னோவில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சாப்மன், பிரேஸ்வெல் தலா 14 ஓட்டங்கள் எடுத்தனர். ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுத்தனர்.

தமிழக வீரரின் மிரட்டல்! பந்துவீச்சு 20 ஓவர்களில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து | Nz 99 In 20 Overs Vs Ind Lucknow

@BCCI (Twitter)

பந்துவீச்சு கூட்டணி

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஹூடா, குல்தீப் ஆகியோர் தலா 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்களை பறக்கவிட்ட நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.      





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.