ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த தடை.! அதிரடி அறிவிப்பு


ஒப்புதல் இல்லாமல் ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை ரஜினி சார்பில் வழக்கறிஞர் சுப்பையா இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சில நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள ரஜினியின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரஜினி தரப்பிலிருந்து இந்த பொது அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த தடை.! அதிரடி அறிவிப்பு | Rajinikanth Legal Notice Against Name Image Voice

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டாராக’ கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவுக்கு வெளியே பல உலக நாடுகளிலும் அறியப்படும் பிரபலமாவார். அவரது ஸ்டைல், குரல், நடை, உடை பாவனைகளை அப்படியே பிரதிபலிக்கும் இளைஞர்கள் ஏராளம்.

இந்நிலையில், நடிகர் ரஜினியின் குரல், நடை, உடை பாவனைகளை அப்படியே பிரதிபலிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தும் மேடைக் கலைஞர்கள் மத்தியில், நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு தங்களது வாழ்வாதாரம் பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் மலையாள நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கின்றனர்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.