உ.பி.,யில் மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு சிறை: யோகி ஆதித்யநாத் | 10 years imprisonment for conversion: Yogi Adityanath

மும்பை: உ.பியில் இப்போது யாரும் மதமாற்றத்தில் ஈடுப்பட முடியாது. அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், குற்றவாளி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதியத்நாத் கூறியுள்ளார்.

மும்பையில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னரில் நடந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி பேசியதாவது: நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும். இதையடுத்து நமது முன்னேற்றத்தை தடுக்க, யாராலும் தடுக்க முடியாது. உ.பியில் சட்ட விரோதமாக மதம் மாற்றுவதை தடுக்கும் சட்டம், நவம்பர் 2020ல் இருந்து நடைமுறைக்கு வந்தது.

சிலர் மத மாற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உ.பியில் இப்போது யாரும் மதமாற்றத்தில் ஈடுப்பட முடியாது. அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு குற்றவாளி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

latest tamil news

சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதை ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும். சனாதன தர்மம் என்றால் மனிதநேயம் என்று பொருள். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது.

புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையின் முகலாய தோட்டத்தின் பெயரை ‘அம்ருத் உதான்’ என்று மத்திய அரசு மாற்றியுள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.