தமிழ்நாட்டில் ஆட்சி.. இப்போதைக்கு முடியாது – மோடி உறுதி… அண்ணாமலை ஷாக்..!

தமிழ்நாட்டில் பாஜக விரைவாக வளர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை போல கூட்டணி அரசியல் செய்யாமல் தனிக்கட்சியாக நின்று தமிழகத்தை ஆள்வதே டெல்லி மேலிடத்தின் திட்டமும்கூட. ஆனால், வடக்கே இன்னும் பாஜக கைப்பற்றாத மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இருப்பதால் டெல்லி மேலிடம் முழு கவனத்தை அங்கு செலுத்தி வருகிறது.

மேலும், இந்துத்துவாக்கு எதிரான தமிழகத்தில் பாஜகவுக்கு உள்ள சவால்களை எதிர்கொண்டு 4 எம்எல்ஏக்களை பெற்றது போல, பின்னாளில் வலுவான வியூகத்தை வகுத்து பலவீனமான தொகுதிகளை டார்கெட் செய்வதும் பாஜகவின் பிளானாக இருக்கும் என்கின்றனர். அதற்குள் எப்படியாவது ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றியம் வாரியாக, வார்டு வாரியாக, பஞ்சாயத்து வாரியாக கட்சியை வளர்த்துவிட வேண்டும் என்று அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் கொடுத்துள்ள பேட்டியில் 2026 சட்டமன்ற தேர்தலை குறித்து பேசியது பரபரப்பை கிளப்பியது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, நிச்சயமாக, மீண்டும் உங்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன்; 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் 150 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை கூறினார்.

இவர் அதேபோல, 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 இடங்களில் பாஜக வெற்றி பெரும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அதிமுக கூட்டணியில் அவ்வளவு சீட்டுகள் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தனித்து போட்டியிட்டால் பாஜகவின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதை குறித்து பிரதமர் மோடியின் கணிப்பு என்ன என்பதை குறித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அந்த பேட்டியில் உமா ஆனந்தன் கூறியது; மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது கமலாலய அரங்கத்தில் எங்களிடம் ஒன்றை கூறினார். அது, ” இங்க வந்துள்ள பாஜகவினரை பார்த்து நான் பெருமை படுகிறேன். ஏனென்றால் குறைந்தது 20 ஆண்டுகள் வரை நாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அது உங்களுக்கும் தெரியும், ஆனாலும்கூட 20 ஆண்டுகளாக நீங்கள் பாஜகவில் உள்ளீர்கள். ஆட்சிக்கு வரமாட்டோம் என தெரிந்தும் கட்சிக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு பெருமை” என்று மோடி கூறினார் என்று உமா ஆனந்தன் அந்த பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்ணாமலையின் குறுகிய கால இலக்குகள் மிக பெரிதாக இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பேசுபவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.