கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 21 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்..!

டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் தண்ணீரில் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சாய்ந்த நெற்பயிர்களை இயந்திரம் மூலமாக அறுவடை செய்ய இயலாதென தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.