பிரித்தானிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை… இன்று முதல் அமுல்


புதிதாக கடவுச்சீட்டு பெற விரும்பும் பிரித்தானியர்கள் இன்றே(பிப்ரவரி 2ம் திகதி) விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அல்லது அவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கின்றனர்.

கட்டணம் அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக, வியாழக்கிழமை(பிப்ரவரி 2ம் திகதி) முதல் கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
இணையமூடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க 75.50 பவுண்டுகளில் இருந்து தற்போது 82.50 பவுண்டுகளாக அதிகரிக்க உள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை... இன்று முதல் அமுல் | Major Passport Warning Apply Today

Credit: Alamy

சிறார்களுக்கான புதிய கடவுச்சீட்டுக்கு 49 பவுண்டுகளில் இருந்து 53.50 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
அதாவது, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தங்களுக்கான கடவுச்சீட்டுகளை பெற இனி 23 பவுண்டுகள் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.

இதுவரை 272 பவுண்டுகள் செலுத்தினால் போதும் என்ற நிலையில் இருந்து தற்போது 249 பவுண்டுகள் செலுத்த வேண்டும்.
மட்டுமின்றி, அஞ்சல் அலுவலகம் வாயிலாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.

சேவையை மேம்படுத்தும்

அஞ்சல் அலுவலகமூடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க 93 பவுண்டுகள் செலுத்த வேண்டும், சிறார்களுக்கு 64 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பானது சேவையை மேம்படுத்தும் பணிகளுக்கு உதவும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை... இன்று முதல் அமுல் | Major Passport Warning Apply Today

@getty

புதிய கடவுச்சீட்டு பெற உங்களுக்கு 6 மாதங்கள் எஞ்சியிருந்தால், நீங்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

பிப்ரவரி மாதம் நீங்கள் விடுமுறை செல்ல விரும்பினாலும், அல்லது பிப்ரவரி 1ம் திகதி புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்தாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் உங்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.