ராமர் மற்றும் ஜானகி சிலைகளை உருவாக்க நேபாளத்தில் இருந்து புனித கற்கள் அயோத்தி வந்தடைந்தன

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இங்கு வைக்கப் படும் ராமர் மற்றும் ஜானகி சிலைகளை உருவாக்க, சீதை பிறந்த இடமான நேபாளத்தின் ஜானக்பூரில் இருந்து சாலிகிராம் என அழைக்கப்படும் 2 புனித கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கல் 18 டன் எடையிலும், மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளன.

நேபாளத்தின் ஜானக்பூரில் உள்ள காலி கந்தகி ஆற்றங் கரையில் இந்த சாலிகிராம் கற்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து 2 புனித கற்களை, இங்குள்ள ஜானகி கோயில் நிர்வாகம் அயோத்திக்கு அனுப்பியுள்ளது. நேபாள பிரதிநிதிகள் குழு நேற்று இந்த கற்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. அயோத்தியில் புனித கற்களுக்கு  ராம் ஜன்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தினர் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். இதில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.