வெளிநாடு ஒன்றில் கனடாவின் புதிய தூதரக ஜெனரலாக மூத்த பத்திரிகையாளர்! பிரதமர் ட்ரூடோ கூறிய வார்த்தைகள்


நியூயார்க்கில் உள்ள எங்களின் புதிய தூதரக ஜெனரலாக, கனேடியர்களுக்கு டாம் கிளார்க் தொடர்ந்து சேவை செய்வார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

டாம் கிளார்க்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கனடாவின் கான்சல் ஜெனரல், பாஸ்போர்ட், விசா மற்றும் குடிவரவு சேவைகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களுக்கு ராஜதந்திர சேவைகளை வழங்குகிறது.

அதேபோல் இந்த அலுவலகம் ஆவணங்களை அறிவிக்கவும், வெளிநாட்டு படிப்புக்கான குடியேற்ற சேவைகளை வழங்கவும் மற்றும் கனேடியர்கள் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்கவும் உதவும்.

இந்த நிலையில் தான், கனடாவின் மூத்த ஒளிபரப்பு பத்திரிகையாளரான டாம் கிளார்க், நியூயார்க்கில் உள்ள கனடாவின் தூதரக ஜெனரலாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.

டாம் கிளார்க்/Tom Clark

Global News-யின் முன்னாள் தலைமை அரசியல் நிருபராக பணியாற்றியுள்ள டாம் கிளார்க், கனேடிய பத்திரிகைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

ஆனால், பத்திரிகைகளில் இருந்து விலகிய அவர் பல பணிகளை மேற்கொண்ட நிலையில், கடந்த மே மாதம் எட்மண்டனில் நடந்த கன்சர்வேடிவ் தலைமைத்துவ விவாதத்தை நெறிப்படுத்தினார். தற்போது Global Public Affairs-யில் பொது விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புகளின் தலைவராக கிளார்க் பணிபுரிந்து வருகிறார்.

ட்ரூடோவின் ட்வீட்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், ‘கனடாவின் மிகவும் மரியாதைக்குரிய பத்திரிகையாளர்களில் ஒருவரான டாம் கிளார்க் அரசியல், பொருளாதாரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியவர்.

மேலும் அவர் நமது நாடு மற்றும் உலகில் அதன் நிலைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொண்டார்.

நியூயார்க்கில் உள்ள எங்களின் புதிய கான்சல் ஜெனரலாக, கனேடியர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அந்த அனுபவத்தைப் பயன்படுத்துவார்’ என தெரிவித்துள்ளார்.  

வெளிநாடு ஒன்றில் கனடாவின் புதிய தூதரக ஜெனரலாக மூத்த பத்திரிகையாளர்! பிரதமர் ட்ரூடோ கூறிய வார்த்தைகள் | Canadian Consul General New York Trudeau Tweet

@Twitter (JustinTrudeau)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.