எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் சம்யுக்தா மேனன். ஆனால் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. 5 வருடங்களுக்கு முன்பு களரி, ஜூலைக் காற்று படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். இப்போது வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழுக்கு வருகிறார்.

வாத்தி படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்துள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: நான் பாலக்காட்டு பொண்ணு. தமிழ் எனக்கு சரளமாக பேச வரும். தமிழ் படங்களில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்பு வரவில்லை. வந்த வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை. சில வாய்ப்புகளை நான் நிராகரித்தேன். தனுஷுடன் வரவேண்டும் என்பதற்காத்தான் இவைகள் நடந்ததாக நான் கருதிக் கொள்கிறேன்.

இந்த படத்தில் அரசு பள்ளி பயாலாஜி ஆசிரியையாக நடித்திருக்கிறேன். இந்த படம் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் படம். நான் பிளஸ் 2 வரைதான் படித்தேன். அதற்கு பிறகு நடிக்க வந்துவிட்டேன். எல்லோரும் படிக்க வேண்டும். ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுததக்கூடாது. எனக்கு நடனம், நடிப்பு பிடித்தது அந்த துறைக்கு நான் வந்து விட்டேன்.

எனது பெயர் சம்யுக்தா தான் ஆனால் மேனன் என்று ஜாதி அடைமொழி போட்டுக் கொள்வதை நான் எப்போதும் விரும்புவதில்லை. மலையாள சினிமாவில் ஏகப்பட்ட சம்யுக்தாக்கள் இருப்பதால் மீடியாக்கள்தான் என்னை தனியாக சுட்டிக்காட்ட மேனனை இணைத்து கொண்டார்கள். தயவு செய்து என்னை மேனன் என்று ஜாதி அடையாளப்படுத்தாதீர்கள். எனக்கு ஜாதியே பிடிக்காது. என்னை சம்யுக்தா என்று அழைத்தால் போதுமானது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.