சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் :நிடி ஆயோக் துணைத் தலைவர் பரிந்துரை| Need to reduce dependence on China: Nidhi Aayog Vice-Chairmans recommendation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :சில முக்கியமான உள்ளீட்டு பொருட்களின் தேவைக்காக, சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை குறித்து அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, முக்கியமான உள்ளீட்டு பொருட்களுக்கு, அந்நாட்டை அதிகம் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான நடவடிக்கைகளில்

அதிக கவனம் எடுக்க வேண்டும்.

latest tamil news

துரதிருஷ்டவசமாக, கடந்த 7 ஆண்டுகளாக, அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் வர்த்தகத்தை ஓர் ஆயுதமாக தேர்ந்தெடுத்துள்ளன.சீன நிறுவனங்கள் சந்தைகளை தேடுகின்றன. இந்திய சந்தையை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. அதன் ஏகபோகத்தை தடுக்க, அதை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பல முக்கியமான உள்ளீட்டு பொருட்களுக்காக சீனாவை சார்ந்துள்ளது. குறிப்பாக, மருந்து பொருட்களுக்காக அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 2022ல், இந்தியாவுக்கு 9.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 21.7 சதவீதம் அதிகம்.
அதேசமயம், இந்தியாவிலிருந்து 1.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களையே இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 37.9 சதவீதம் குறைவாகும்.
இதையடுத்து, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் அதிகரித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.