"துருக்கி வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கம்!" – நெஞ்சை உறையவைக்கும் படங்கள்! | Visual Story

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

மேலும் பலர் மீட்கப்படவுள்ள நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலையில் 6.0 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

துருக்கி – சிரியா ஆகிய இரண்டு நாடுகளுமே இந்த நிலநடுக்கங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா உட்படப் பல நாடுகளும் இந்த இரு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கின்றன.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கங்களால் பல கட்டடங்கள் மொத்தமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் லெபனான், சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

இது துருக்கி வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

துருக்கி – சிரியா நிலநடுக்கம்

1999-ல் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000-க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. (1999-ல் எடுக்கப்பட்ட படம்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.