யூடியூப்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க – இந்தியர் நீல் மோகன் நியமனம்

புதுடெல்லி: ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். யூடியூப்-ன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

> ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான 49 வயதாகும் நீல் மோகன் கடந்த 2015ம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக உள்ளார்.

> நீல் மோகன் தனது பணியை அக்சென்ச்சரில் 1996ம் ஆண்டு தொடங்கினார். பின்னர் நெட்க்ராவிடி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த நிறுவனம் இணை விளம்பர நிறுவனமான டபிள்க்ளிக் -ஆல் வாங்கப்பட்டது.

>கடந்த 2007ம் ஆண்டு டபிள்க்ளிக் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீல் மோகன், அட்வோர்ல்ட், அட்சென்ஸ், டபுள்க்ளிக் உள்ளிட்ட கூகுளின் விளம்பர தயாரிப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

> நீல் மோகன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். அங்கு அவர் கார்ப்பரேட் யுத்திகளை வகுக்கும் மேலாளராக இருந்துள்ளார்.

> அமெரிக்காவின் பர்சனல் ஸ்டைலிங்க் சேவை நிறுவனமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ், பயோடெக் நிறுவனமான 23அண்ட்மீ ஆகியவைகளின் நிர்வாக குழுவில் நீல் மோகன் இருந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.