Technology Terms: டெக்னாலஜி உலகில் பயன்படுத்தப்படும் Tech வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

டெக்னாலஜி உலகம் மிகவும் வேகமாக உருமாறிவருகிறது. தினமும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகின்றன. இதனால் தினமும் பல புதிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பல வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரியாமலே நாமும் தினமும் பயன்படுத்துகிறோம்.

LLMs

இதன் முழு ஆக்கம் Large Language Models ஆகும். இது மனிதர்களின் மொழியை புரிந்துகொள்ளவும் அதை மீண்டும் உருவாக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டெக்னாலஜி மூலமாக பல லட்சக்கணக்கான வார்த்தைகள் ஆராயப்பட்டு அவற்றின் அர்த்தம் மற்றும் கோர்வை வரிகள் போன்றவை உருவாக்கப்படுகிறது. இது ChatGPT செயலியில் பயன்படுத்தப்படுகிறது.

XR

இதன் முழு வடிவம் Extended Reality ஆகும். இந்த XR என்பது AR (Augmented Reality), VR (Virtual Reality) மற்றும் MR (Mixed Reality) மூன்றும் சேர்ந்தது. இதை வைத்து VR ஹெட் போன்கள் உருவாக்கப்படுகின்றன.

Quantum Computing

பல விதமான கணக்குகளை ஓர் நேரத்தில் செய்யக்கூடிய டெக்னாலஜியே Quantum Computing ஆகும். அதாவது மிகவும் கடினமான சவால் நிறைந்த கணக்குகளை Quantum Physics விதிமுறைகளை பயன்படுத்தி சுலபமாக தீர்க்கும்.

Machine Learning

வெறும் டேட்டா மட்டுமே வைத்துக்கொண்டு கணினிகளை தானாகவே செயல்களை செய்யவைப்பது இந்த Machine Learning ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட டேட்டா கிடைத்ததும் அதை வைத்து தானாகவே அடுத்து என்ன நடக்கும் என்று கணித்து அதற்கு ஏற்றார் போல தானாகவே கணினி அதன் செயல்களை மாற்றிக்கொள்ளும்.

IoT

இதன் முழு அர்த்தம் Internet of Things ஆகும். தற்போது இணையத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு சிறந்த உதாரணமா நமது வீடுகளில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் கருவிகளான Alexa, Google Assistant போன்றவை.

Avatar

மனிதர்களின் உடல் அமைப்புகளை போன்றே இருக்கும் அனிமேஷன் பொம்மைகள் Avatar என்று அழைக்கப்படுகின்றன. இது பொதுவாக Metaverse, Whatsapp, Instagram போன்ற சமூகவலைத்தளங்களில் காணப்படுகிறது.

OIS

Optical Image Stabilization என்ற பெயர் உள்ள OIS நமஹ ஸ்மார்ட்போன்களின் கேமரா உள்ளே பயன்படுத்தப்படுகிறது. இவை நாம் எடுக்கும் படங்களுக்கு நிலையான ஒரு வடிவத்தை வழங்கும்.

Regenerative Braking

தற்போது எலக்ட்ரிக் வாகன உலகில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை இந்த Regenerative Braking என்ற வார்த்தை ஆகும். அதாவது நாம் ஒவ்வொரு முறை எலக்ட்ரிக் வாகனங்களில் பிரேக் எழுதும்போதும் அதன் மூலமாக உருவாகும் விசை சக்தியை பயன்படுத்தி நமது வாகனங்களில் பேட்டரி சார்ஜிங் செய்யப்படுகிறது. இதனால் மின்சாரமாக மாற்ற இந்த Regenerative Braking பயன்படுத்தப்படுகிறது.

Telephoto/Periscope Lens

நமது ஸ்மார்ட்போன் கேமரா அனைத்திலும் இவை இருக்கும். அதாவது நமது போன்களில் வட்ட வடிவில் இருக்கும் கேமரா Telephoto lens கொண்டவை. அதுவே சதுரமாக இருப்பது Periscope Lens ஆகும்.

GPS

Global Positioning System என்று அழைக்கப்படும் இது நமது இருக்கும் இடத்தின் Location அறியும் ஒரு கருவி ஆகும். இதை நாம் ON செய்தால் உலகில் எங்கு இருந்தாலும் கண்டுபிடிக்கமுடியும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.