எங்களை சீண்டினால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…கிம்மின் சகோதரி கடும் எச்சரிக்கை


அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை முன்னெடுக்க வட கொரியா தயாராக இருப்பதாக கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டு ராணுவ பயிற்சி

 கொரிய தீபகற்பத்தில் சில நாட்களாக அமெரிக்கா- தென் கொரியா படைகள் இராணுவ போர் பயிற்சியை செய்து வருகின்றனர்.

அத்துடன் இந்த மாத இறுதியில் இரு நாடுகளும் பிரம்மாண்டமான மற்றொரு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எங்களை சீண்டினால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…கிம்மின் சகோதரி கடும் எச்சரிக்கை | Kim Jong Un S Sister Warns North Korea And UsGetty

இந்நிலையில் வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டால் மிகப்பெரிய நடவடிக்கை முன்னெடுக்க வட கொரியா தயாராக உள்ளது என கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீண்டாமல் இருப்பது நல்லது

இது குறித்து கிம் யோ ஜாங் தெரிவித்துள்ள கருத்தில், கைப்பாவை தென் கொரிய ராணுவம் மற்றும் அமெரிக்க படைகள் கொரிய பிராந்தியத்தில் அமைதியற்ற நகர்வுகளை செய்து வருகின்றனர். 
 

இதற்கு பதிலடியாக எந்த நேரத்திலும் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை வட கொரியா எடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

எங்களை சீண்டினால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…கிம்மின் சகோதரி கடும் எச்சரிக்கை | Kim Jong Un S Sister Warns North Korea And Us

இதற்கு முன்னதாக “ நீங்கள் அமைதியாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உறங்க வேண்டும் என்றால் எங்களை சீண்டாமல் இருப்பது நல்லது என்று கடந்த ஆண்டு கிம் யோ ஜாங் அமெரிக்காவின் ஜோ பைடன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.