அமெரிக்க மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி நியமனம்| Appointment of Indian origin as US District Judge

வாஷிங்டன், அமெரிக்காவின் மாவட்ட நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியன், 43, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் பணி நிமித்தமாக, அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகருக்கு பல ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்தனர். கடந்த 1979ல் அருண் சுப்பிரமணியன் அமெரிக்காவில் பிறந்தார்.

இவர், 2001ல் ‘கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ்’ பல்கலையில் பி.ஏ., பட்டம் பெற்றதுடன், 2004ல் கொலம்பியா சட்டப் பள்ளியில், ஆராய்ச்சிக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் – தெற்கு மாவட்டத்திற்கு நீதிபதியாக இவரை நியமிக்க, அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இங்கு நியமிக்கப்படும் தெற்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நீதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.