புதுச்சேரி போத்தீஸில் மகளிர் தின விழா| Womens Day Celebration at Puducherry Bodhisattva

புதுச்சேரி: புதுச்சேரி போத்தீசில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பொது மக்களுக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் புதுச்சேரி போத்தீஸ் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி, போத்தீஸ் பெண் ஊழியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழக விரிவுரையாளர் உமா சந்திரசேகர் பங்கேற்று, பெண்களுக்கான நிதி மேலாண்மை, மகிழ்வோடு வாழ்தல் ஆகியவற்றை விளக்கி, பெண் வாழ்வியலை மேம்படுத்துதல் பற்றி கூறினார்.

பெண் ஊழியர்களுக்கான உணவு உண்ணுதல், பலுான் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு போத்தீஸ் புதுச்சேரி பொது மேலாளர் அருண்மொழி பரிசளித்தார். விழா ஏற்பாடுகளை, மனிதவள மேலாளர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.