8 மாதம் முன்பு காணாமல் போன கணவனை வீட்டு அலமாரியில் கண்டுபிடித்த பெண்!


அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை 8 மாதங்களுக்குப் பிறகு அவரது வீட்டு அலமாரியில் அவரது சடலத்தைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் துர்நாற்றம்

அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த ரிச்சர்ட் மேட்ஜ் 53 என்பவரைக் கடந்த ஏப்ரல் 2022 முதல் காணவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்க காவல் துறை விசாரணையைச் செய்தது.

அவரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்காவின் ட்ராய் நகரில் அவரது மனைவியோடு பகிர்ந்து கொண்ட வீட்டை காவல்துறையினர் குறைந்தது இரண்டு முறை சோதனை செய்ததாகத் தெரியவந்துள்ளது.

8 மாதம் முன்பு காணாமல் போன கணவனை வீட்டு அலமாரியில் கண்டுபிடித்த பெண்! | American Man Found As A Body After 8 Months@Facebook

இரண்டு சோதனைகளிலும், வீட்டிற்குள் “சாக்கடை போன்ற” வாசனை வீசுவதாகக் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அலமாரியில் மம்மி உடல்

ரிச்சர்ட் காணாமல் போன எட்டு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 11 ஆம் தேதி வரை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மரங்களை அலங்கரிக்கும் அலங்கார பொருளை அவர்களது படுக்கையறையில் உள்ள சிறிய அலமாரியும் தேடும் போது அவரது மனைவி ஜெனிபர் ரிச்சர்ட் மேட்ஜின் மம்மி போன்று சுற்றி வைக்கப்பட்டுள்ள உடலைக் கண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

மரண விசாரணை அதிகாரிகளின் அறிக்கையின்படி, அவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவந்துள்ளது.

8 மாதம் முன்பு காணாமல் போன கணவனை வீட்டு அலமாரியில் கண்டுபிடித்த பெண்! | American Man Found As A Body After 8 Months@facebook

படுக்கையறையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சேமிப்பு பகுதியில் உடல் தொங்கியதாகக் கூறுகிறார்கள். ரிச்சர்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அது சிதைந்து மம்மியாக மாற்றப்பட்டுள்ளது.

மம்மி செய்யப்பட்ட உடல்கள் துர்நாற்றம் வீசுவதில்லை, அதனால்தான் அந்த நபர் நீண்ட காலமாகக் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாக உள்ளூர் ஊடகங்களுக்கு பொலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல் துறை விசாரணை

வேலைக்குச் சென்ற தனது கணவரைக் காணவில்லை என ஏப்ரல் 2022 அன்று காவல் துறையிடம் ஜெனிபர் புகார் அளித்துள்ளார்.

பொலீசார் ஆதாரங்களைச் சேகரித்து அந்த நபரைத் தேடினர், ஆனால் பயனில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு, ஜெனிஃபர் மீண்டும் காவல்துறையினரை அழைத்து, அவர்கள் குறிப்பிட்ட துர்நாற்றம் மறைந்துவிடவில்லை என்று புகாரளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்குத் திரும்ப வந்த காவல்துறையால் ரிச்சர்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் டிசம்பரில், ஜெனிஃபர் தனது கிறிஸ்துமஸ் அலங்காரங்களைத் தேடும் போது கணவரைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த கொலைக்கான காரணத்தைக் காவல் துறை கண்டுபிடிக்க காவல் துறை விசாரணையைத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.