இந்திய சந்தையில் அறிமுகமான மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கு குறைவான விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் இது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் வரிசையில் ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் திரை அளவு கொண்ட இந்த போன் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 930 சிப்செட்
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் கேமரா இடம் பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 30 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் திறன்
  • 5ஜி இணைப்பு வசதி
  • இந்த போன் பாக்ஸில் சார்ஜரும் இடம் பெற்றுள்ளது
  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டுள்ளது
  • இந்த போனின் விலை ரூ.18,999
  • அறிமுக சலுகையாக ரூ.2,000 வரை குறிப்பிட்ட வங்கிகளின் கார்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என தகவல்
  • வரும் 16-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.