Agilan Review: ஒன் மேன் ஷோ… ஜெயம் ரவியின் 'அகிலன்' படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பூலோகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்.கல்யாண கிருஷ்ணன். தற்போது மீண்டும் அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கியுள்ள படம் அகிலன். இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Naresh, Pavithra Lokesh: 2 முறை விவாகரத்தான நடிகையை 4வது திருமணம் செய்த சூப்பர் ஸ்டாரின் அண்ணன்!

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியானது. மிரட்டலான வசனங்களுடன் இருந்த ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அகிலன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சகர்களும் தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி அகிலன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

Pavithra Lokesh, Naresh Babu: 44 வயது நடிகையை 4வது திருமணம் செய்த நடிகர்… தீயாய் பரவும் போட்டோஸ்!

அகிலன் படத்தை பார்த்த இந்த ரசிகர் பதிவிட்டிருப்பதாவது, நடிகர் ஜெயம்ரவிக்கு பாராட்டுக்கள். அவர் தனது முந்தைய படங்களில் இருந்து வித்தியாசமான அவதாரத்தைக் காட்டியுள்ளார். கிரே ஷேட் ரோல் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாதியில் அவரது கதாபாத்திரத்தில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. அவரது கடின உழைப்பு திரையில் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Sathish Kaushik: திடீரென மரணமடைந்த சதீஷ் கவுஷிக்.. கட்டியணைத்த போட்டோவை போட்டு கலங்க வைத்த மகள்!

சினிமா விமர்சகரான ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில், அகிலன் படத்திற்கு 5க்கு 3.25 ரேட்டிங் கொடுத்துள்ளார். ஏராளமான சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டுகள் இருப்பதாகவும், இயக்குநர் கல்யாண் கடல் துறை முகங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்றும், அவர் உலகளாவிய பசி பிரச்சினையை அழகாக கலக்கியுள்ளார். இது நடிகர் ஜெயம்ரவியின் ஒன் மேன் ஷோ என பதிவிட்டுள்ளார்.

அவருடைய மற்றொரு பதிவில், துறைமுகப் பின்னணியில் ஒரு அதிரடி வணிக பொழுதுபோக்கு.. ஜெயம் ரவி அகிலனாக சின்சியராக இருக்கிறார். முரட்டுத்தனமான தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.. எந்த ஒரு காட்சியிலும் சிரிக்கவில்லை.படத்தில் அவரிடமிருந்து ஒரு ஆச்சரியம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth: திடீரென செல்வா அத்தானை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… காரணம் இதுதானாம்!

இயக்குநர் கல்யாணும் நடிகர் ஜெயம் ரவியும் அகிலன் படத்திற்காக கடினமாக உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது என்றும் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் பலரும் அகிலன் படத்தின் இரண்டாம் பாதி ஸ்லோவாக இருக்கிறது என்றும் மேலும் ஜெயம் ரவியிடம் எதிர்பார்த்தது இல்லை என்றும் சில நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் பிரியா பவானி ஷங்கர் வா மின்னல் போல் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.