Motorola G73 5G: புதிய 50MP கேமரா வசதியுடன் 18,999 ஆயிரம் ரூபாயில் அறிமுகம்!

இந்தியாவில் புதிய அறிமுகமாக Moto G73 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் செக்மென்ட் மாடலாக இருக்கும் G சீரிஸ் போன்களில் இந்த G73 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரு கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. இதில் 6.5 இன்ச் முழு HD+ டிஸ்பிலே வசதி, 50MP கேமரா வசதி, Mediatek Dimensity 930 SOC சிப் வசதி போன்றவை உள்ளன. இதில் 5000mAh பேட்டரி மற்றும் 30W டர்போ பவர் சார்ஜ்ர் வசதி உள்ளது. இந்தியாவில் நம்பர் 1 ஸ்மார்ட்போன் செக்மென்ட்டாக இருக்கும் மிட் ரேஞ்சு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை விவரம்

இந்த போன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 18,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதில் Lucent White மற்றும் Midnight Blue கலர் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 16 முதல் Flipkart மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை நாம் ஆன்லைன் மூலமாக மட்டுமே வாங்கமுடியும்.

இந்த ஸ்மார்ட்போனை சில வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் Axis, HDFC, ICICI, SBI ஆகிய வங்கிகளின் மூலமாக மாதம் 3,167 ரூபாய் EMI பெறலாம். இந்த ஸ்மார்ட்போனிற்கு Exchange Offer வசதியும் உள்ளது.

MotoG73 5G விவரங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் Android 13 OS வசதி, 6.5 இன்ச் முழு HD+ (1080 x 2400 pixels) டிஸ்பிலே, 120HZ refresh Rate, Mediatek Dimensity 930 SOC உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டும் கிடைக்கிறது. கேமரா வசதிக்காக 50MP முக்கிய கேமரா+8MP அல்ட்ரா வைட் மேக்ரோ டூயல் கேமரா வசதி, 16MP முன்பக்க செல்பி கேமரா வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் Connectivity வசதிகளாக 5G, WiFi, ப்ளூடூத் 5.3, FM Radio, NFC, FM Radio, LTEPP, GLONASS, USB Type-c, 3.5mm ஹெட் போன் ஜாக் வசதி, ஸ்டேரியோ ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன், IP52 வாட்டர் ரெஸிஸ்டண்ட், Lenovo Think shield Mobile Security வசதிகள் உள்ளன. இதில் 5000mAh பேட்டரி வசதி மற்றும் 30W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் எடை 181g ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.