உலகின் வலுவான ராணுவம் : சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேச்சு| The worlds strongest military Chinese President Xi Jinping speech

பீஜிங்: ”சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு அதிபராகவும், ராணுவ தலைவராகவும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தேர்வானார். அந்நாட்டில் அதிபர் பதவி வகித்த கம்யூ., தலைவர் மாசேதுங் உட்பட, வேறு எந்த தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் நீடித்தது இல்லை.

இந்நிலையில், சீன பார்லி மென்டின் நிறைவு விழாவில், 3,000 உறுப்பினர்கள் முன்னிலையில் அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் என்னை அடுத்தடுத்த இலக்கு நோக்கி நகர்த்துகிறது. என் தோள்களில் மிகப் பெரிய பொறுப்புகளையும் சுமத்துகிறது. அரசியலமைப்பு அளித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவேன்.

சீன மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்த்துப் போக விட மாட்டேன். நாட்டின் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் தான் வளர்ச்சிக்கான அடித்தளம். எனவே, நம் ராணுவத்தை நவீனமயமாக் கும் பணிகள் தொடரும்.

சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கை களை அமெரிக்காவும், பிரிட்டனும் அறிவித்து வருவதால், அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவின் வளர்ச்சியை மேற்கத்திய நாடுகள் முடக்குவதாக ஷீ ஜின்பிங் சமீபத்தில் வெளிப்படையாக பேசினார்.

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சு நடத்த, ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.

மேலும், மேற்காசிய நாடு களான ஈரான், சவுதி அரேபியா இடையே நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்து, இரு நாடுகள் இடையே மீண்டும் இணக்கமான போக்கை ஏற்படுத்த சீனா முயற்சித்து வரும் வேளையில், ஷீ ஜின்பிங்கின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.