7th Pay Commission: விரைவில் ஊதியக்கமிஷன் விதிகளில் மாற்றம், ஊதியத்தில் ஏற்றம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு (டிஏ) விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்த விவாதமும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 7வது ஊதியக் குழுவின் விதிகளை 8வது ஊதியக் குழுவில் மாற்றுவது குறித்து சில காலமாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, மத்திய பட்ஜெட் 2023 இல் 8வது ஊதியக் குழு அமலாக்கத் திட்டம் பற்றி சில தகவல்கள் வெளிவரக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இருப்பினும், பிப்ரவரி 1, 2023 அன்று, அரசு ஊழியர்களுக்கு அத்தகைய நல்ல செய்தி எதுவும் வரவில்லை.

8வது ஊதியக்கமிஷன் அமல்படுத்தப்படுமா? 

அடுத்த ஆண்டு 7வது ஊதியக் குழுவுக்குப் பதிலாக 8வது ஊதியக் குழு வரக்கூடும் என்பது தொடர்பான சமீபத்திய அறிக்கை அரசு ஊழியர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு விதிகள் மாற்றப்படும். சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட 5, 6 மற்றும் 7-வது ஊதியக் கமிஷன்களிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. 8வது ஊதியக் குழு குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வரவில்லை என்றாலும், அரசாங்கம் அதற்கான பணிகளைத் தொடங்கி 2024 இல் அறிவிக்கலாம் என்று சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் 8வது ஊதியக் கமிஷனை அரசாங்கம் அறிவிக்கக்கூடும் என்றும், இது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு முந்தைய ஊக்கத்தை அளிக்கும் என்றும் ஒரு கூற்று உள்ளது. மறுபுறம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு அமைந்த பின்னரே இது குறித்த பேச்சுவார்த்தை தீவிர நிலையை எட்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊதியக்கமிஷன் 2024 இறுதிக்குள் முடிவு செய்யப்படலாம்?

இரண்டு சந்தர்ப்பங்களிலும், 7வது ஊதியக் குழுவிற்குப் பதிலாக 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பு 2024 இறுதிக்குள் வரக்கூடும். இது நடந்தால், பரிந்துரைகள் 2026 இல் நடைமுறைக்கு வரலாம். 8வது ஊதியக் குழு, அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் அலவன்ஸ்கள் ஆகியவை குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் ஊழியர்கள் முதல் அதிகபட்ச ஊதியம் வாங்கும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் உயர்த்தப்படும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.