Meena, Nainika, Rajinikanth: இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ… ரஜினியிடம் கேட்ட நைனிகா!

இறுக்கி அணைச்சு ஒரு முத்தம் தருமோ என கேட்ட மீனாவின் மகள் நைனிகாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

மீனாவுக்கு விழாகுழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்த நடிகை மீனா, பின்னர் முன்னணி நடிகையாக உச்சத்தை தொட்டார். 1982கள் முதல் தற்போது வரை 40 ஆண்டுகளை தாண்டி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோயினாகவும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் நடிகை மீனா. 40 ஆண்டுகள் சினிமாவில் கோலொச்சிய நடிகை மீனாவுக்கு பிஹைண்ட்வுட் சேனல் சமீபத்தில் விழா எடுத்து கவுரவித்தது.​ Meena, Rajinikanth: யார் கண்ணு பட்டுச்சோ… மீனாவின் கணவர் மரணம் குறித்து பேசி கலங்கிய ரஜினிகாந்த்!​
ரஜினி அங்கிள்..மீனா 40 என்ற இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகை மீனாவின் மகளான, நைனிகாவும் அவரது அம்மாவும் பங்கேற்றனர். அப்போது மேடைக்கு வந்த மீனாவின் மகள் நைனிகா, தனது அம்மா அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் பேசும், ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என்று கூறி ரஜினியை அழைத்தார்.
​ Sri Reddy: ஆணுறையை சுத்தம் செய்ய சொன்னார்… பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!​
இறுக்கி அணைச்சு…பின்னர் மேடைக்கு வந்த ரஜினிகாந்திடம் நடிகை மீனா முத்து படத்தில் பேசும் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ என்ற வசனத்தை பேசி முத்தம் கேட்கிறார் நைனிகா. இதனைக் கேட்ட நடிகர் ரஜினிகாந்த், நைனிகாவுக்கு அவர் கேட்டது போலவே இறுக்கி அணைச்சு முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த மொத்த அரங்கமும் கர கோஷத்தை காட்டி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது.
​ Leo, Vijay: ஒண்ணுல்ல… ரெண்டுல்ல… மொத்தம் 30… லியோவில் கலக்க போகும் விஜய்!​
தெறிதொடர்ந்து தனது அம்மாவின் பாராட்டு விழாவில் தனது பங்கிற்கு நடனமாடி அன்பை வெளிப்படுத்தினார் நைனிகா. மீனாவின் மகளான நைனிகா, தனது 5 வயதில் அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார் நைனிகா. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நைனிகா.
​ ஐஸ்வர்யாவின் இந்த வெறித்தனத்துக்கு காரணம் இதானா?​
மீனா வருத்தம்கணவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஆக்டிவாகி இருக்கிறார் நடிகை மீனா. இதேபோல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள மீனா அடிக்கடி தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்று தன்னை கவுரவித்த இந்த நிகழ்ச்சியில் தனது கணவர் இல்லாததை நினைத்து நடிகை மீனா வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ​ Trisha, Vijay: ‘த்ரிஷா என் பொண்டாட்டி.. விஜய் விரல் படக்கூடாது.. விக்ரம் செத்துடுவான்’ ஆபாசமாக பேசும் ஏஎல் சூர்யா!​
Rajinikanth

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.