இஸ்ரேல் மீது பாய்ந்த ஏவுகணை: முக்கிய நகரில் விடாமல் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள்


சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


தொடரும் இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் ஆண்டு கணக்கில் நீடித்து வரும் நிலையில், சில பாலஸ்தீன அமைப்புகள் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது.

இதனால் சில பாலஸ்தீன அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்பட்டு, அவர்களுடன் இஸ்ரேல் அரசு தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இஸ்ரேல் மீது பாய்ந்த ஏவுகணை: முக்கிய நகரில் விடாமல் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள் | Rocket Fired Form Gaza At IsraelCredit: Ohad Zwigenberg

மேலும் இரு தரப்புகளும் மேற்கு கரை மற்றும் காசா முனை ஆகிய பகுதியில் அடிக்கடி மோதிக் கொள்வதால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.

ராக்கெட் தாக்குதல்

இந்நிலையில், சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) உறுதி செய்துள்ளது.

இந்த ஏவுகணை, தெற்கு இஸ்ரேலில் உள்ள காசா எல்லை நகரங்களுக்கு அருகே, கிபுட்ஸ் நஹல் ஓஸ்( Kibbutz Nahal Oz) சமூகத்தில் ராக்கெட் எச்சரிக்கை சைரன்களை தூண்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது பாய்ந்த ஏவுகணை: முக்கிய நகரில் விடாமல் ஒலித்த எச்சரிக்கை சைரன்கள் | Rocket Fired Form Gaza At IsraelEPA

ஆனால் வானில் ஏவப்பட்ட ஏவுகணை திறந்த பகுதி ஒன்றில் விழுந்ததால், அதை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.