அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? திருச்சியில் திருப்பம் ஏற்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவிலிருந்து எங்களை நீக்குவதற்கான அதிகாரமும், தகுதியும் யாருக்கும் இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் நிறைவடையவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

தீர்ப்பு வந்த பின்னர் தான் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவுகளால் தான் அதிமுக சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான எதிர்ப்பு அலை தொண்டர்கள் மத்தியில் உருவாகியுள்ளது

திருச்சியில் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளோம். அதன் பின்னர் பிற நகரங்களிலும் பொதுக்கூட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.

பன்ரூட்டி ராமச்சந்திரன் பேசும் போது, “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத் தனமானது. முறையாக தேர்தலை அறிவிக்கவில்லை. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரேக் இல்லாத வண்டியை போல் போய்க்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தானே ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பன்ருட்டி ராமச்சந்திரன், “கட்சி தான் அடிப்படை. நிலம் போன்றது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது விளைச்சல் மாதிரி. ஒரு மகசூல் நஷ்டமானாலும் பரவாயில்லை. நிலம் எங்களிடம் தான் உள்ளது. அடுத்த மகசூலில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை

விரைவில் சந்திக்க உள்ளதாக கூறினாலும் அந்த சந்திப்பு தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டே வருகிறதே என்ன காரணம் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் என்று வழக்கு நடத்தி வருகிறார், அதனால் இணைந்து செயல்படுவதில் இருவருக்குமே சிக்கல் உள்ளது. டிடிவி தினகரனை பொறுத்தவரை இணைந்து செயல்படலாம் ஆனால் அமமுக என்ற கட்சியிலிருந்த படியே ஆதரவு அளிப்பேன் என்கிற நிலைப்பாட்டில் உள்ளார். அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போல.” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.