ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ உடைய இந்திய வம்சாவளி சிறுமி!


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட தனக்கு அதிக நுண்ணறிவு (IQ) இருப்பதைக் கண்டறிந்த இந்திய வம்சாவளி சிறுமி மென்சாவில்(mensa) உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதிக நுண்ணறிவு

உலகின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற IQ சமூகமான மென்சாவுடன் தேர்வில் அன்விதா பாட்டீலுக்கு(Anwita patel) 11 வயது தான் ஆகியிருந்தது.

அன்விதாவின் தாயான அனு ஒரு கணிதவியலாளராவார், அவர் கணிதத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர் மற்றும் அவரது தந்தை ஒரு NHS ஆலோசகர் ஆவார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ உடைய இந்திய வம்சாவளி சிறுமி! | Girl 12 Higher Iq Albert Einsten@MEN MEDIA

கணிதத்தில் எண்கள் கணக்கீடு கேள்விகளுக்கு அன்விதா பதில் சொல்லும் போது மகளின் இயல்பான புத்திசாலித்தனத்தை அவரது தாய் அனு முதலில் கவனித்துள்ளார்.

மாற்று வழியில் யோசிக்கும் திறன்

“ஆரம்பப் பள்ளி முதலே, என் மனைவிக்குத் தெரியாத சில பிரச்சனைகளைத் தீர்க்க அன்விதா உதவுவாள்” என அன்விதாவின் தந்தை கூறியுள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ உடைய இந்திய வம்சாவளி சிறுமி! | Girl 12 Higher Iq Albert Einsten@MEN MEDIA

”நானும், அன்விதாவும் ஒன்றாக கணித சவால்களை செய்தோம், ஆனால் சில நேரங்களில் எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை என்றால் அவள் அதற்கு அவள் விடையை கண்டுபிடித்து தருவாள். அவள் மிகவும் வித்தியாசமான முறையில் சிக்கலான கணித கேள்விக்கு விடை கண்டுபிடிப்பாள். ” என அனு கூறுகிறார்.

அன்விதாவின் பெற்றோர் அவளை ஒரு சோதனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர், இது இரண்டு பகுதிகளாக இருந்திருக்கிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ உடைய இந்திய வம்சாவளி சிறுமி! | Girl 12 Higher Iq Albert Einsten@MEN MEDIA

முதல் சோதனை மொழியியல் திறன் மற்றும் பக்கவாட்டு சிந்தனை, இதில் அன்விதா 162 மதிப்பெண்களைப் பெற்றார், இரண்டாவது சோதனையில் காட்சி மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வைக் கண்டார், அதில் அவர் 140 ஐ எட்டியுள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விட அதிக நுண்ணறிவு

விடிங்டன் பெண்கள் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் அன்விதா மாணவி ஜனவரி மாதம் மென்சா தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண் பெற்றதை மென்சா அறிவித்ததோடு அவரை மென்சா குழுவின் உறுப்பினர் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ உடைய இந்திய வம்சாவளி சிறுமி! | Girl 12 Higher Iq Albert Einsten@MEN MEDIA

பொதுவாக உலகின் சிறந்த அறிஞர்களாக கருதப்படும் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கீங் ஆகியோரது அதிகபட்ச நுண்ணறிவே 160க்குள் தான் இருக்குமென அறிஞர்கள் கூறுகிறார்கள்.

“அவள் மென்சாவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவாள் என தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மதிப்பெண்னை பெறுவாள் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என அன்விதாவின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.