காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்..பிரிட்டனில் பெரும் பதற்றம்.. இந்திய கொடி அவமதிப்பு.!

சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரி பஞ்சாபிலும், வெளிநாடுகளிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பிரிட்டனில் இந்திய கொடியை அவமதிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

காலிஸ்தான் கோரிக்கை

பலமாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை இந்திய துணை கண்டம் என அழைக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கலாச்சாரம், பண்பாடு, மொழி என பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. மாநில மக்களின் மதிப்புகளுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போது அங்கு தனி நாடு கோரிக்கை எழுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளததால் தான் தந்தை
பெரியார்
திராவிட நாடு கோரிக்கை வைத்தார்.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களும் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 1980களில் காலிஸ்தான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உளவுத்துறை ஆயுதங்கள் வழங்கி பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆப்ரேஷன் புளு ஸ்டார் என்ற பெயரில், சீக்கிய மத தளத்தில் இருந்த தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவம் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து தனது சீக்கிய மெய்காப்பாளரால் அப்போதய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

முற்றிய போர்

இந்தநிலையில் ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் மற்றும் ஒரே மொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. இத்தகைய சூழலில் பஞ்சாபில் காலிஸ்தான் கோஷம் தற்போது அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீக்கியர்களும் காலிஸ்தான் தனிநாடு கோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் காலிஸ்தான் கோறும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் அமைப்பை உருவாக்கிய அம்ரித் பால் சிங் எனும் நபரால் பஞ்சாப்பில் சமீப நாட்களில் வன்முறை அதிகரித்துள்ளது. சிலநாட்களுக்கு முன்பு அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்ற அம்ரித் பால் சிங் மற்றும் அவரது குழுவினர் பயங்கர ஆயுதங்களுடன் சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கடந்த மார்ச் 2 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் திட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவாதித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் இன்று 3வது நாளாக அம்ரித்பால் சிங்கைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பஞ்சாப்பில் இன்று இண்டர்நெட் தடை செய்யப்பட்டது.

இந்திய கொடி அவமதிப்பு

இந்தநிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இந்திய மூவர்ணக் கொடியை இறக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு வாளுடன் சென்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய உயர் அணையத்தில் சென்று மிரட்டியதும் குறிப்பிடதக்கது.

இத்தகை சூழலில், காலிஸ்தானி ஆதரவாளர்களை தனிமைப்படுத்துமாறு சீக்கிய அமைப்புகளுக்கு ஆளும் பாஜக இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. கட்சியின் முக்கிய சீக்கியத் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணைய கட்டிடத்தில் இருந்து சில காலிஸ்தானி ஆதரவாளர்கள் தேசியக் கொடியை அவமதித்த லண்டன் சம்பவத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

செயற்கை பற்கள் வைக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை

ஒன்றிய அரசு காட்டம்

இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று மாலை புது டெல்லியில் உள்ள இங்கிலாந்தின் மூத்த தூதரக அதிகாரியை வரவழைத்து, உயர் ஆணைய வளாகத்தில் “பாதுகாப்பு இல்லாததற்கு” விளக்கம் கோரியது. இந்திய தூதர்கள் மற்றும் பணியாளர்கள் மீது இங்கிலாந்து அரசின் “அலட்சியம்” “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மக்கள் ஆனந்த கண்ணீர்; அப்படி என்ன செய்தான் திருடன்.?

அம்ரித்பால் சிங்குக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக வெளிநாடுகளில் நேற்று மாலையே போராட்டம் தொடங்கியது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செல்போன் வீடியோக்கள் போராட்டக்காரர்கள் கட்டிடத்தின் மீது ஏறி இந்தியக் கொடியை அகற்றுவதைக் காட்டியது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், காலிஸ்தான் சார்பு குழுக்கள் காலிஸ்தான் மீது பொதுவாக்கெடுப்பு நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.