ரஷ்யாவில் சீன அதிபர்.. உக்ரைனில் ஜப்பான் பிரதமர்.. 3ம் உலகப் போர் ஸ்டார்ட்.?

ரஷ்யாவில் சீன அதிபர் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், எதிரணியில் உள்ள ஜப்பான் பிரதமர் உக்ரைனுக்கு திடீர் பயணம் பேசு பொருளாகியுள்ளது.

உக்ரைனில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதால், ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்கியது. போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போர் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க ரஷ்யா கங்கனம் கட்டிக் கொண்டு வேளை செய்து வருகிறது.

இது ஒரு மூன்றாம் தர போர் அல்ல. இது ரஷ்ய இறையாண்மை மற்றும் ரஷ்யர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் போர் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். போரில் ரஷ்யா பின் வாங்கும் நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது என ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவை விட அதிக அணு ஆயுதங்களை ரஷ்யா வைத்திருப்பது குறிப்பிடதக்கது.

உக்ரைன் போரில் அமைது பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காமல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி போரை நீட்டித்து வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த தருணத்தில், உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் அதி நவீன ஆயுதங்களை வழங்க ஒப்புக் கொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகக்கு சீனா கடுமையாக கண்டனம் தெரிவித்தது. அதேபோல் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களினால், ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் வழங்கும் என தகவல்கள் வெளியாகியன. இந்தநிலையில் சீன அதிபராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்ட ஜி ஜின்பிங் கடந்த 20ம் தேதி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், அதிபர் ஜி ஜின்பிங் மார்ச் 20 முதல் 22 வரை ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வார்” என்று சீன வெளியுறவு துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சீன அதிபரின் ரஷ்யா பயணத்தின் கடைசி நாளான இன்று, எதிரணியில் உள்ள ஜப்பான் பிரதமர் உக்ரைனுக்கு இன்று பயணம் மேற்கொண்டது பேசு பொருளாகியுள்ளது.

ரஷ்யாவில் சீன அதிபர்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று திடீர் பயணமாக உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். மேலும் கடந்த ஆண்டில் 400 பொது மக்கள் கொல்லப்பட்ட புச்சா நகரத்தை பார்வையிட்ட ஜப்பான் பிரதமர், ‘‘”ஒரு வருடத்திற்கு முன்பு புச்சாவில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டு உலகமே பதட்டமடைந்தது. இங்குள்ள அந்த இடத்திற்குச் சென்றபோது நடந்த அட்டூழியத்தைக் கண்டு நான் மிகுந்த கோபத்தை உணர்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் சீன அதிபர்

மேலும், “பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருக்கும் ஜப்பானிய குடிமக்கள் சார்பாக நான் இரங்கல் தெரிவிக்க விரும்புகிறேன். அமைதியை மீட்டெடுக்க ஜப்பான் உக்ரைனுக்கு மிகப்பெரிய முயற்சியுடன் தொடர்ந்து உதவி செய்யும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.