சூறாவளி புயல்: அமெரிக்காவில் அவசரநிலை | Hurricane Storm: Emergency in America Emergency in America

வாஷிங்டன்-அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளிப் புயல் ஏற்படுத்திய பயங்கர பேரழிவால் 26 பேர் பலியாகினர். நுாற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மிசிசிபி மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சூறாவளியில் சிக்கி இங்குள்ள கட்டடங்கள், விளைநிலங்கள் சேதமடைந்தன.

பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறாவளி துவங்கிய சில நிமிடங்களிலேயே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மாகாணத்தில் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மணிக்கு 113 கி.மீ., வேகத்தில் வீசிய காற்று, ரோலிங் பார்க், டீப் சவும், அலபாமா உள்ளிட்ட பகுதிகளை புரட்டிப் போட்டது.

பல இடங்களில் கார்கள், தற்காலிக நகரும் வீடுகள் போன்றவை துாக்கி வீசப்பட்டன. சூறாவளியில் சிக்கி மிசிசிபியில் 25 பேர் உயிரிழந்தனர். அலபாமாவில் ஒருவர் பலியானார்.

மேலும் பலர் மாயமாகி உள்ளதால், இவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதி களில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

பயங்கர சூறாவளி குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டதால், குறைந்த அளவே உயிரிழப்பு ஏற்பட்டதாக மிசிசிபி மாகாண கவர்னர் டாடா ரீவ்ஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, சூறாவளி ஏற்பட்ட மிசிசிபி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கரோல், ஹம்ப்ரேஸ், மோன்றோ, ஷார்கி ஆகிய பகுதிகளில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.