போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு தகவல்

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 28 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2017-2018-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை விமானப்படையில்  பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 19 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.

அவர்களுடைய குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையும், கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மகள்களின் திருமணத்திற்காகவும் (2மகள்கள் வரை), கணவரை இழந்தப் பெண்களின் மறுமணத்திற்காகவும், ரூ. 50,000 அளிக்கப்பட்டுள்ளது. இவை கொடிநாள் நிதியின் கீழ் வழங்கப்பட்டது.

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய்பட் மாநிலங்களவையில் டாக்டர் சாந்தனுசென் திரு அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

அதேபோல், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? பதிலளித்தார் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் அவர்கள்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம் ஆகியோர் எழுத்து மூலம் எழுப்பிய கேள்விக்கு,இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.