Suriya 42: சூர்யா – ஞானவேல் சண்டைக்கு இதுதான் காரணமா ? வெளியான உண்மை காரணம்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாக இருந்து வந்த சூர்யா தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகின்றார். கடந்த ஒரு சில ஆண்டுகளாக சூர்யாவின் திரைப்படங்கள் ரசிகர்களின் கூடுதல் எதிர்பார்ப்பை பெற்று வருகின்றது. அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம்.

சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற அழுத்தமான கதைக்களங்களாக சூர்யா தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரின் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இடையில் சில காலம் தோல்வி படங்களாக கொடுத்து வந்த சூர்யா தற்போது தன் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.

Leo: படம் முடியும் வரை கொஞ்சம் பொறுமையா இருப்பா..லோகேஷிற்கு தளபதி போட்ட கண்டிஷன்..!

அதன் காரணமாகவே சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களை தேர்தெடுத்து நடித்து வருகின்றார். மேலும் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் சூர்யா. இதைத்தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

ஐந்தே நிமிடம் வந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் சூர்யா. இதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் சூர்யாவிற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சூர்யா ஞானவேல் ராஜாவை ஒதுக்கி வந்ததாகவும் தகவல்கள் வந்தன.

சூர்யாவின் பல திரைப்படங்களை தயாரித்தவர் தான் ஞானவேல் ராஜா. இதையடுத்து சூர்யாவிற்கு ஞானவேல் ராஜா தயாரித்த சில படங்களில் உடன்பாடில்லை என்பதால் அவரை ஒதுக்கி வந்தாராம். ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களை ஞானவேல் ராஜா தயாரித்தார்.

இதனால் சூர்யா அவரின் தயாரிப்பில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதன் காரணமாக கார்த்தியும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிப்பதை சில காலம் நிறுத்தினார். இந்நிலையில் தற்போது இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தற்போது மீண்டும் சூர்யா ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.