நாடே எதிர்பாக்கும் தேர்தல் தேதி வெளியானது..!!

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது .224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடக தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கர்நாடகாவில் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

முதல் முறை வாக்காளர்கள் 9.17 லட்சம் அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் 01 ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

மேலும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 36 தனித் தொகுதிகளும், 15 பழங்குடியினர் தனித்தொகுதிகளும், 173 பொதுத் தொகுதிகளும் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலின் போது 61 தொகுதிகள் பதற்றமானதாக இருந்தது. தற்போது அது 81ஆக அதிகரித்துள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.