20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

தமிழ்நாடு காவல்துறையில் 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கியும், 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் மைய எஸ்பியாக ஜானகிராமனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையர் அலுவலக எஸ்பியாக மங்களேஸ்வரனும், சென்னை பயிற்சி கல்லூரி எஸ்பியாக சந்திரமவுலியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாணை

அதேபோல் தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாக மாரிராஜனும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக மோகன் நவாஸும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சென்னை எஸ்பியாக கெங்கைராஜும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாணை

அதேபோல் மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார். சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி, உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சுப்பாராஜூக்கு எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு, டிஜிபி அலுவலக நிர்வாக எஸ்பி, உதவி ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசாணை

திருச்சி ஏஎஸ்பி ஆசைத்தம்பி, திருப்பூர் நகர எஸ்பியாக பதவி உயர்த்தப்படுகிறார். ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பி. முத்துக்கருப்பன், பழனி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. கொளத்தூர் காவல் துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் செவ்வூர் சிறப்புக் காவல் பட்டாலியன் எஸ்பி சந்திர சேகரன், கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்படுகிறார்.

வேலூர் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியின் ஏஎஸ்பி, வேலூர் மாவட்ட சேவூர் பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் எஸ்பியாக பதவி உயர்வு செய்யப்படுகிறார். செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பொன்ராமு பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ரயில்வே எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பி.ரவிசேகரன், சென்னை ஐ.ஜி. தலைமையகத்தில் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்’’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.