ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்… டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரகசியமாக பணம் செலுத்தியதாக நியூயார்க் கிராண்ட் ஜூரி டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளது. 2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நடிகையுடன் இருந்த தொடர்பில் இருந்ததை மறைத்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.  2006 ஆம் ஆண்டு ட்ரம்ப்பும், ஸ்டெபானி கிளிஃபோர்ட் என்ற ஆபாச நட்சத்திரமும் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு ஒரு வருடம் முன்பாக 2005 இல், டிரம்ப் தனது தற்போதைய மனைவி மெலனியா டிரம்பை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

டிரம்ப் மீதான் இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் கூறப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட கோஹன் 

 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் டிரம்ப்  – ஸ்ட்ராமி டேனியல்ஸ் விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் இந்த விஷயத்தை மறைக்க டேனியல்ஸுக்கு $130,000 கொடுத்தார். அமெரிக்க ஊடகங்கள் இந்த செய்தியை அம்பலப்படுத்திய பிறகு கோஹன் அரசு வழக்கறிஞர்களுடன் ஒத்துழைத்தார். 2018 இல், வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரச்சார நிதிச் சட்டங்களை மீறியதற்காக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். டேனியல்ஸுக்கு பணம் கொடுக்க சொல்லி, ட்ரம்ப்  தனக்கு பணம் கொடுத்ததாக கோஹன் சாட்சியம் அளித்தார்.

அமெரிக்காவில் கிரிமினல் வழக்கு விசாரணை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் புகைப்படம் மற்றும் கை ரேகை போன்றவை எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். எனவே, முன்னாள் அமெரிக்க அதிபரான ட்ரம்ப்பையும் கையில் விலங்கு பூட்டி கைது செய்து, மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடவே ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | நான் திரும்பி வந்து விட்டேன்… முகநூலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.