\"என்னங்க நியாயம்\".. ராகுலுக்காக குரல் கொடுத்த ஜெர்மனி.. உடனே வந்த பாஜக.. \"ஏனெனில் நம் பிரதமர் மோடி\"

பெர்லின்: ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக ஜெர்மன் நாட்டின் செய்தித் தொடர்பார் தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலார் பகுதியில் ராகுல் காந்தில பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையின் போது ‘மோடி’ குறித்து அவதூறாக பேசியதாக குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஏறத்தாழ 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 23ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவதுடன் ரூ.15 அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி ஹெ.ஹெ.வர்மா தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

அறிவிப்பு

இதனையடுத்த ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதாவது மக்கள் பிரிதிநிதிகள் சட்டத்தின்படி எம்பி அல்லது எம்எல்ஏ ஏதேனும் குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் அந்த பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த சட்டத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியின் எம்பி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் கைகோர்த்துள்ளன. அதேபோல காங்கிரசுடன் கூட்டணி அல்லாத கட்சி தலைவர்களான மமதா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்ரே ஆகியோர் உட்பட இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

போராட்டங்களும், கண்டனங்களும் தீவிரமடைந்துள்ள நிலையில் சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரங்களை அமெரிக்கா உண்ணிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை முதன்மைத் துணைச் செய்தித் தொடர் பாளர் வேதாந்த் படேல், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும். அந்த வகையில், இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாப்பதையும் அமெரிக்கா-இந்தியா இரு நாடுகளின் ஜனநாயகங்களையும் வலுப்படுத்துவதற்கான திறவுகோலாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்” என்று கூறியிருந்தார்.

 ஜெர்மனி

ஜெர்மனி

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து ஜெர்மனியும் இது தொடர்பாக கருத்து கூறியுள்ளது. அதாவது, “இந்தியாவில் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முதல் முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொண்டு இருக்கிறோம். அவர், எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டது பற்றியும் கவனத்தில் எடுத்து உள்ளோம். நாங்கள் அறிந்தவரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூடிய நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார். இந்த தீர்ப்பு நிலையான ஒன்றா அல்லது அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா என்பது பற்றி தெளிவாக தெரிய வரும். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்க விவகாரத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது” என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரிஜூஜூ

ரிஜூஜூ

இந்நிலையில், ராகுல் காந்தி விவகாரத்தில் தலையிட்டு, ஜெர்மனி இவ்வாறு கருத்து சொன்னதுமே, இதற்கு பாஜக தரப்பு உடனடியாக ரியாக்ட் செய்தது.. இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாட்டின் தலையீட்டிகு அழைப்பு விடுத்த ராகுல் காந்திக்கு நன்றி என்று விமர்சித்துள்ளார். மேலும், வெளிநாட்டு தலையீட்டின் மூலம் இந்தியாவின் நீதித்துறையை ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும், எந்த ஒரு அந்நிய ஆதிக்கத்தையும் இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும், ஏனென்றால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி” என்றும் பதிலடி தந்துள்ளார்..

 நச் பதிலடி

நச் பதிலடி

இதை பார்த்ததுமே, மறுபடியும் காங்கிரஸ் பதிலடி தந்துள்ளது.. காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் துறை தலைவர் பவன் கேரா, “ரிஜிஜூ அவர்களே… நீங்கள் ஏன் பிரதான பிரச்சினையில் இருந்து திசை மாறுகிறீர்கள்? ராகுல் காந்தியின் கேள்வி அதானி பற்றியது… நீங்கள் முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள். அதை விட்டுட்டு, மக்களை திசை திருப்பாதீர்கள்” என்று காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.. இப்படியான விவாதங்களும், கருத்தக்களும் மாறி மாறி இணையத்தில் வலம்வந்து கொண்டிருந்தாலும், ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் கருத்து சொன்ன முதல் நாடாக ஜெர்மனி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஜெர்மனி சொன்ன அந்த கருத்து இப்போது உள்நாட்டில் விவாதப் பொருளாவும் மாறிவருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.