கனடா அமெரிக்க எல்லையில் குழந்தை உட்பட ஆறு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிப்பு: புலம்பெயர்வோரா?


கனடா அமெரிக்க எல்லையில், நேற்று மாலை ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்வோரா?

சமீபத்தில் கனடாவும் அமெரிக்காவும் புலம்பெயர்வோர் எல்லை கடக்கும் பகுதி ஒன்றை மூடியதைத் தொடர்ந்து, வேறு வழியாக புலம்பெயர்வோர் எல்லை கடக்க முயற்சி செய்யலாம், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை 5.00 மணிக்கு, கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள St. Lawrence நதியோரமாக உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கனடா அமெரிக்க எல்லையில் குழந்தை உட்பட ஆறு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிப்பு: புலம்பெயர்வோரா? | Six Dead Bodies Found At Canada Us Border

AP 

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சியில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். உயிரிழந்தவர்கள் புலம்பெயர்வோரா என்பது உறுதிசெய்யப்படவில்லை. 

எந்த நாட்டவர்கள்?

உயிரிழந்த ஆறுபேரில், அந்தக் குழந்தைக்கு மட்டும் கனடா பாஸ்போர்ட் உள்ளது. மற்றவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை இப்போதைக்கு தெரிவிக்கமுடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எதனால், எப்போது உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

The Akwesasne Mohawk பகுதி பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.