திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி


இந்திய மாநிலம் ஹரியானாவில் கார் விபத்தில் ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

திருமண நிகழ்ச்சி

ஹரியானாவின் ஹிசர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சாஹர், சோபித், அரவிந்த், அபினவ், தீபக், அசோக் மற்றும் புனேஷ் ஆகிய இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அனைவரும் ஒரே காரில் தங்கள் ஊர்களுக்கு பயணித்தனர். கார் அரோகா – அடம்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி | 6 Youngster Killed In Car Accident At Haryana

சம்பவ இடத்திலேயே பலி

இதனால் சாலையோரத்தில் இருந்த மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் புனேஷ் தவிர ஏனைய 6 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் காயமடைந்த புனேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோர விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக காரை இயக்கியதே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. 

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி | 6 Youngster Killed In Car Accident At Haryana 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.