காதலியுடன் சேர்ந்து செய்யக்கூடாத வேலை.. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ்ஐ!

காரைக்கால்: காரைக்கால் போலி நகை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மறறும் புதுச்சேரியில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பிகளால் நகைகளை உருவாக்கி, வங்கிக
ள் மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான எஸ்ஐயின் காதலியான புவனேஸ்வரியை 3 தனிப்படைஅமைத்து தேடிய போலீசா, ஆந்திராவின் காக்கிநாடாவில் வைத்து கைது செய்தனர்.

மோசடி எப்படி

மோசடி எப்படி வெளியே வந்தது? காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிக்கும் கைலாஷ் என்பவர் பெரம சாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரு கிறார். இவரது நகைக்கடைக்கு கடந்த 10-ந் தேதி, காரைக்கால் சின்னக் கண்ணு செட்டி வீதியை சேர்ந்த பரசுராமன் (வயது30) என்ற இளைஞர் சென்றுள்ளார்.

சிக்கிய பரசுராமன்

சிக்கிய பரசுராமன்

பரசுராமன் அங்கு 12 பவுன் தங்க செயினை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டிருக்கிறார். கைலஷ், தனது பெரியப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்திருக்கிறார் பாலமுரளி ஜுவல்லரிக்கு சென்று, நகையை பரிசோதித்திருக்கிறார். அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்தார். அவர்களின் ஏற்பாட்டின் பேரில், பரசுராமனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் பாலமுரளி ஒப்படைத்தார்.

கோடிக்கணக்கில் மோசடி

கோடிக்கணக்கில் மோசடி

போலீசார் பரசுராமனி டம் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) போலி தங்க நகையை தயாரித்து விற்பனை செய்ய கொடுத்தாக கூறியிருக்கிறார். அந்த தகவலை அடுத்து ரிபாத் காமிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இதுபோல் பல இடங்களில் போலிதங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யததாக திடுக்கிடும் தகவல் வெளி வந்தது. இச்சம்பவம் காரைக்காலில் உள்ள அடகுக்கடைகள் மற்றும் வங்கி நிர்வாகத்தினரிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

தேடிய போலீஸ்

தேடிய போலீஸ்

இதையடுத்து இந்த வழக்கில் தீவிரமாக இறங்கிய போலீசார், போலி தங்க நகை விற்பனைக்கு மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட், அவரது நண்பர் புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து எஸ்ஐ ஜெரோம் ஜேம்ஸ்பாண்டை கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர். புவனேஸ்வரியை தேடி வந்தனர்.

தனிப்படை அதிரடி

தனிப்படை அதிரடி

மேலும் இதுதொடர்பாக காரைக்கால் புதுத்துறையைச் சேர்ந்த மொய்தீன் (31), திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(35) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான எஸ்ஐயின் காதலியான புவனேஸ்வரியை 3 தனிப்படைஅமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திராவின் காக்கிநாடாவில் வைத்து புவனேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மொத்தம் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

இந்நிலையில் போலி நகை மோசடி வழக்கில் எஸ்ஐ ஜெரோமை பணி நீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. ஜெரோம் சிறையில் உள்ள நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவை காவல்துறையினர் சிறைக்கு சென்று வழங்கினார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.